கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கடற்படை தலைமையகத்திற்கு வருகை

கடற்படையின் முன்னாள் தளபதி, அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, இன்று (2019 அக்டோபர் 30,) காலை கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு அவருக்கு மூன்று அதிகாரிகள் மற்றும் 79 மாலுமிகள் கொண்ட விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அன்புடன் வரவேற்றார். அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கெளரவ பதவிக்கி உயர்த்தப்பட்ட பின்னர் கடற்படை தலைமையகத்திற்கு வருகைதந்த முதல்தடவையாக குறிப்பிடப்பட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஆயுதப்படைகளின் தலைவரும் தளபதியுமான அதிமெதகு. மைத்திரிபால சிறிசேன அவர்களினால் தேசத்திற்கு வழங்கப்பட்ட சேவை, தைரியம் மற்றும் தாய்நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்பட்ட சிறந்த சேவை ஆகியவற்றை அங்கீகரிக்க 2019 ஆகஸ்ட் 05 ஆம் திகதி முதல் அவர் அட்மிரல் ஒப் த ப்லீட் பதவிக்கு நியமிக்கப்பட்டார், இலங்கை கடற்படை வரலாற்றில் அட்மிரல் ஒப் த ப்லீட் பதவி முதல் முறையாக பெற்ற அதிகாரி இவர் ஆகுவார்.

மேலும், கடற்படைத் தளபதியால் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுடன் கடற்படை தலைமையகத்தில் உரையாடினார். அங்கு கடற்படைத் தளபதியால் கடற்படையின் தற்போதைய பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்து அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு தெரிவித்தார். இந் நிகழ்வுக்காக கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கடற்படை துணைத் தலைமை பணியாளர், பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல, கடற்படைப் பணிப்பாளர் நாயகங்கள் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க ஆகியோர் கழந்து கொண்டனர்.

இந்த உத்தியோகபூர்வ நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது. கடற்படைத் தலைமையகத்திற்கு வந்த அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட புறப்படுவதற்கு முன் கடற்படை தளபதி மற்றும் நிர்வாக வாரியத்துடன் குழு புகைப்படமொன்றுக்கும் எடுத்தார் மேலும் கடற்படை தளபதி அலுவலகத்தில் உள்ள சிறப்பு விருந்தினர்களின் நினைவு புத்தகத்தில் ஒரு நினைவு குறிப்பு வைத்தார்.