சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

நயாறு, குருகந்த கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் 2019 அக்டோபர் 23 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளை மூலம் நயாறு, குருகந்த கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன. கைது செய்த நபர்கள் திருகோணமலை புல்முடை பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு மற்றும் வெளிப்புற எரிப்பு இயந்திரம் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர்கள்,டிங்கி படகு, வெளிப்புற எரிப்பு இயந்திரம் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லைதிவு உதவி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.