ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர் உட்பட தூதுக்குழுவினர் தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

ஆஸ்திரேலிய துணை உயர் ஸ்தானிகர், விக்டோரியா கோக்லே (Victoria Coakley)அவர்கள் உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23, அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை கடற்படை முகாமுக்கு விஜயமொன்று மேற்கொண்டுள்ளனர்.

அங்கு, கடற்படை கட்டளை அதிகாரி (ஹம்பாந்தோட்டை), கொமடோர் அசோக விஜேசிரிவர்தனவினால் துணை உயர் ஸ்தானிகர் உட்பட தூதுக்குழுவை வரவேற்றார். மேலும் கொமடோர் அசோக விஜேசிரிவர்தன, ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் கடற்படையின் பங்கு குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.

இந் நிகழ்வுக்காக ஆஸ்திரேலிய பாதுகாப்பு கல்லூரியின் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் டேவிட் பெவ்டர் (Devid Brewter) மற்றும் ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை சர்வதேச கொள்கை அதிகாரி, எரிக்கா குலி (Erika Culley) ஆகியோரும் கழந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது,