பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கொழும்பு, காலி முகத் ஹோட்டலில் தொடங்கிய காலி கலந்துரையாடல் 2019 சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த பிரிட்டிஷ் ராயல் கடற்படை செயல்பாட்டு பயிற்சி நிர்வாகி கொமடார் சைமன் ஹண்டிங்டன் (Simon Huntington) உட்பட தூதுக்குழு 2019 அக்டோபர் 23 அன்று கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

கொமடோர் சைமன் ஹண்டிங்டன் உட்பட தூதுக்குழு முதலில் கிழக்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி கொமடோர் ஜெயந்த குலரத்னவைச் சந்தித்தனர், அங்கு துணைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளையின் பங்கு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.

அதன் பின்னர் குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கட்டளை சுழியோடி பிரிவு பார்வையிட்டனர். மேலும் குறித்த பிரதிநிதிகள் கடல்சார் அருங்காட்சியம் மற்றும் கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தையும் பார்வையிட்டனர்.

இந் நிகழ்வுகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கையில் பிரிட்டிஷ் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.