சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இனைந்து 2019 செப்டம்பர் 29 ஆம் திகதி வாலச்சேனை மீன்பிடி துறைமுக வலாகத்தில் வைத்து 94.2 கிலோ கிராம் சவுக்கு சுறாக்களுடன் 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன் படி இலங்கை கடல் பகுதியில் வாழ்கின்ற அரியவகை மீன்வகையான சவுக்கு சுறா 94.2 கிலோகிராம் மீன்பிடி படகொன்று மூலம் வாலச்சேனை மீன்பிடி துறைமுக வலாகத்திக்கு கொண்டு வரும் போது கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் வாலச்சேனை கடலோர காவல்படை இனைந்து இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 27 முதல் 49 வயதுக்குட்பட்ட நிர் கொழும்பு பகுதியில் வசிப்பவர்கள் என்று கண்டரியப்பட்டன குறித்த சந்தேகநபர்கள் மற்றும் சுறா மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாலச்சேனை, கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மீன்வள மற்றும் நீர்வள வளச் சட்டத்தின் கீழ், மீனவர்கள் அல்லது விளையாட்டுக்காக மீன்பிடிக்கச் செல்லும் எவருக்கும் சவுக்கு சுறா பிடிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்தவொரு படகு உரிமையாளர் அல்லது மாலுமி இறந்த சுறாவின் இறந்த உடலை அல்லது உடலின் எந்தப் பகுதியையும் படகில் வைத்திருக்கவும், அதை வேறொரு படகிற்கு மாற்றவும், இறக்கவும், சேமிக்கவும், விற்கவும் அனுமதிக்கப்படுவதில்லை.