“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய திட்டத்திற்கு இணையாக கடற்படை நடத்திய இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சிக்கு இணையாக இரண்டு மரக்கன்று நடும் திட்டங்கள் 2019 ஆகஸ்ட் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவந்துரை மற்றும் அலைப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றன.

அதன் படி, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் ஒருங்கிணைந்து வடக்கு கடற்படை கட்டளையால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, இதில் ஜனாதிபதி உதவி செயலாளர், யாழ்ப்பாண மேயர், கடலோர பாதுகாப்புத் துறையின் பிரதிநிதிகள், பெரியகுளம் வித்யாலயாவின் பாடசாலை மானவர்கள் மற்றும் சாவகாச்சேரி இந்து கல்லூரியின் மானவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். , முத்தரப்பு பணியாளர்கள் மற்றும் இப்பகுதியில் ஏராளமான குடியிருப்பாளர்களும் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.