மூத்த கடற்படை வீரர்கள் 39 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 39 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு 2019 ஆகஸ்ட் 19 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 19.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

கடற்படையின் நீண்ட காலமாக சேவைசெய்த மூத்த வீரர்களின் சேவை மதிப்பீடு செய்ய குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன. இது வரை 2375 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு கடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 2520 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு குறித்த வட்டியற்ற கடன் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடத்தக்கது.