காலி துறைமுகத்தில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திட்டம்

காலி துறைமுகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு கடமைகளைச் செய்யும் கைவினைப் பணியாளர்களுடன் இணைக்கப்பட்ட பணியாளர்களின் தீயணைப்பு மற்றும் சேதக் கட்டுப்பாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், துறைமுக வளாகத்தில் இன்று (ஜூலை 31, 2019) வேலைத்திட்மொன்று நடத்தப்பட்டது.

காலி துறைமுகத்தின் துறைமுக வசதி பாதுகாப்பு அதிகாரி கொமடோர் அருணா தனபாலவின் உத்தரவைத் தொடர்ந்து, துறைமுக வசதி பாதுகாப்பு அலுவலகத்தால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 05 சேவை வழங்கும் படகுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு குழு கலந்துகொண்ட நிகழ்வில், பங்கேற்பாளர்களுக்கு பலவிதமான நடைமுறை அறிவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.