இலங்கை கடல் எல்லையில் 2379 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது.

இலங்கையின் வடமேற்கு கடல்களில் ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளும் மீன்பிடிப்படகும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக் கப்பல் ‘சாகர’ ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் வேலையில் இந்திய கடல் எல்லையில் இருந்து சர்வதேச கடல் எல்லைக் கோட்டைக் கடக்கும் இலங்கை பிராந்திய கடலுக்குள் சந்தேகத்திற்கிடமான மீன்பிடித் படகொன்று இருப்பதைக் கண்டது. அதன்படி, இலங்கை கடற்படைக் கப்பல் ‘சாகர’ வின் மேலதிக தேடலின் போது, பீடி இலைகளைக் கொண்ட 74 பொதிகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, மீன்பிடித் படகும் அங்கு இருந்த சந்தேக நபர்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டனர்.

கடற்படை காவலில் வைக்கப்பட்ட பீடி இலைத்தொகை, மீன்பிடித் படகு மற்றும் சந்தேக நபர்கள் கல்பிட்டியாவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ‘விஜய’ என்ற கடற்படை நிறுவனத்திற்க்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைப்பொதிகள் பொதிகள் கொழும்பு சுங்க அழுவலகத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டன, கைது செய்யப்பட்ட இந்திய நாட்டினர் மற்றும் மீன்பிடிப்படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதுமட்டுமல்லாது தற்பதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவைத் தொடர்ந்து, மீனவர்களின் போர்வையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதுபோன்று இந்த ஆண்டு மட்டும் 27,000 கிலோ பீடி இலைகளை கடற்படை கைப்பற்றியுள்ளது. மேலும், தீவின் நீரில் நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.