கடற்கரைகளை பாதுகாப்பதற்காக கடற்படையின் வேலை திட்டங்கள்

29 ஜூன் 2019 அன்று, கடற்கரையை பாதுகாப்பதற்கான மற்றுமொறு வேலைத்திட்டத்தை தெற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் மேற்கொண்டனர்.

இலங்கை கடற்படையின் தெற்கு கடற்படைக் கப்பல்கள் 'தக்க்ஷின' மற்றும் 'நிபுன' அதிகாரிகள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், கடற்கரைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கிங்கொட கடற்கரையில் குப்பை அகற்றும் திட்டங்களை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கட்டளை துணைத் தளபதியும், தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஏராளமான அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் மாசுபட்ட இந்த கடற்கரை சூழல் கழிவு இல்லாத கடற்கரையாக மாற்றப்பட்டது.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், கடற்படைக்குள் பச்சை நீல கருத்தை செயல்படுத்த கடற்படை பல சூழல் நட்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும், கடற்படை எப்போதும் ஒரு சுத்தமான கடற்கரையை பராமரிப்பதற்கும், அனைத்து கடற்படை தளங்களிலும் வாராந்திர கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.