மட்டக்களப்பு களப்பு பகுதியில் 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்டுப்பு

இன்று (ஜூன் 29) மட்டக்களப்பு களப்பு பகுதியில் கடற்படை 25 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், இன்று மட்டக்களப்பு களப்பு பகுதியில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, தடைசெய்யப்பட்ட இந்த 25 மீன்பிடி வலைகளை மீட்டனர். இதனையடுத்து இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மேற்படி சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மீன்வள உதவி இயக்குநரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.