போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்களுடன் இணைந்து பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் 2019 ஜூன் 27 ஆம் திகதி மாத்தரை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படையினருடன் ஒருங்கிணைந்து தங்காலை, பட்டியபொல பொலிஸ் அதிரடிப்படை அதிகாரிகள் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் இந்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் 24 வயதான திச்சமஹராமாவில் வசிப்பவராக கண்டரியப்பட்டன.

மேலும் குறித்த சந்தேகநபர் கைது செய்யும் போது அவரிடமிருந்து 100 கிராம் கேரல கஞ்சாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கேரல கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.