இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது

இலங்கை கடற்படையின் வேகமாக தாக்குதல் ரோந்து படகு ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை 2019 ஜூன் 22 அன்று கொண்டாடியது.

அதன்படி, அதன் கட்டளை அதிகாரி,கொமடோர் (மாலிமா) கிருஷாந்த விட்டாச்சியின் உத்தரவின் பேரில், ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் பின் கட்டளை அதிகாரி காலையில் பிரிவுகளை ஆய்வு செய்து அவரது குழு உறுப்பினர்களுக்கு உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, கப்பலின் அதிகாரிகளும் படையினரும் ஆண்டு விழா கொண்டாட்டங்களை முடித்து ‘பரகனா’ பாரம்பரிய உணவில் பங்கேற்றனர்.