நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

பண்டாரவளை, பனங்கல குழத்தில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

பண்டாரவளை, பனங்கல குழத்தில் விழுந்து நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுபிடிக்க உதவி கோரி அனர்த்த முகாமைத்துவ மையத்திருந்து கடற்படைத் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்த பின், தென் கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்களின் ஒரு நீர் முழ்கி குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு கடுமையான முயற்சியின் பின்னர் கடற்படையினர் நீரில் மூழ்கிய நபரின் உடலை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட பூத உடல் மேலதிக நடவடிக்கைகளுக்கு பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இறந்த நபர் பண்டாரவளை, பல்லெவல பிரதேசத்தில் வசித்துள்ளவராக கண்டரியபட்டுள்ளது.