வெள்ளம் விபத்துக்கு முன் கடற்படை தயாராக உள்ளது

காலி வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில் நேற்று இலங்கை (ஏப்ரில் 29) கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடிக்கின்ற சூறாவளி ‘போனி’ காரணத்தினால் தற்போது ஆறுகளின் நீர் அளவு அதிகரித்து வருகிறது. அதன் பிரகாரமாக கின் கங்கை ஊடாக உள்ள வாக்வெள்ள பாலத்தின் மற்றும் முல்கட பாலத்தின் பாரியமூங்கி மரங்கள், குப்பைகள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்டதன் காரணத்தினால் எதிர்காலத்தில் ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழும் மக்களுக்கு வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புக்கு முன் ஒரு தீர்வாக கடற்படையினரினால் குறித்த நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையில் மேற்கொள்கின்ற சிறப்பு பாதுகாப்பு திட்டங்களுக்கு கடற்படை ஊழியர்கள் மிகவும் பயன்படுத்தப்படுகின்ற சூழ்நிலையின் கீழ் இந்த வெள்ளப் பேரழிவு நிலைமையை எதிர்த்து நிற்க கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் தென் கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில் சமரவீரவின் கண்காணிப்பில் தென் கடற்படை கட்டளையின் நீர்முழ்கி பிரிவின் மற்றும் மரையின் பிரிவின் வீர்ர்களினால் பொது மக்களின் பஙகளிப்புடன் இன் நடைவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற வெள்ளம் பேரழிவு நிலைமைகளுக்கு முகம் கொடுக்க மக்களுடன் கைகோர்க்க கடற்படை தயாராக உள்ளது.


வக்வெல்ல பாலத்தில் குப்பைகள் அகற்றுதல்>


முல்கட பாலத்தில் குப்பைகள் அகற்றுதல்