கடற்படையினரது குடும்பங்கலில் பிள்ளைகளுக்கு புழமைப்பரிசில் வழங்கள்
 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரீட்ச்சைக்கு முகம் கொடுத்து, சிறந்த முறையில் சித்தியடைந்த நபர்களின் பிள்ளைகளுக்கு புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 30) கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களின் தளமையில் இலங்கை கடட்படை கப்பல் பராக்கிரம அட்மிரல் சோமதிலக திசானாயக்க மண்டபத்தில் இடம்பெற்றது. கடற்படை உறுப்பிநர்களுடைய பிள்ளைகளின் எதர்கால கல்வி நடவடிக்கைளை வெற்றிகரமாக செல்வதற்க்கு ஊக்குவிக்கும் முகமாக, கடற்படை நலன்புரி சேவை பிரிவின் மூலம் இந்த மாணவ வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இங்கு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரீட்ச்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்த கடற்படை சேவையில் இருக்கும் போது மரணித்த, ஊணமடைந்ந மற்றும் தற்போது சேவையில் இருக்கும் கடற்படையினரின் பிள்ளைகள் 302 பேருக்கும் ஒரு பிள்ளைக்கு தலா 5000.00 ரூபா படி சலுகைகள் வழங்கப்பட்டது. இந்த புலமைப்பரிசில் நான்கு கட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளதுடன், இதன் முதல் கட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் போது கடற்படை சேவையில் இருக்கும் போது மரணித்த, ஊணமடைந்ந கடற்படையினரின் பிள்ளைகள் 06 பேர் மற்றும் தற்போது சேவையில் இருக்கும் கடற்படையினரின் பிள்ளைகள் 76 பேர் உட்பட பிள்ளைகள் 82 பேருக்கு காசோலைகள் வழங்கும் நிகழ்வு கடற்படை தளபதி மூலம் நடத்தப்பட்டது.

இச் சந்தர்பத்திற்கு கடற்படை தலைமை அலுவலகர், ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்ஹ, ரியர் அட்மிரல் அஜித் சமரசிங்ஹ, இயக்குனர் கடற்படை நலன்புரி சேவை, கொமடோ செனரத் விஜேசூரிய ஆகியோர் உட்பட கடற்படை தலமையத்தில் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகளும் புலமைப் பரிசில்களை பெரும் பிள்ளைகளின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.