இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி மூலம் வெலிஒய பகுதியில் மேற்கொன்டுள்ள மருத்துவ முகாமுக்கு கடற்படையின் ஆதரவு
 

இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி (Sri Lanka College of Military Medicine) மூலம் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி வெலிஒய, பரனகம வெவ கல்ழுரியில் நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டன.

கடற்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர். ரியர் அட்மிரல் சேன ஜயவர்தன அவரின் அறிவுரை படி கடற்படை மருந்துவ பிரிவின் மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் குறித்த மருத்துவ முகாமுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், குழந்தை பராமரிப்பு, வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள், பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் கடுமையான / நாட்பட்ட உடல்நல நோய்கள் ஆகியன அவதானிக்கப்பட்டு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. அதன் பிரகாரமாக மருத்துவ சிகிச்சை பெற கடினமான வெலிஓயா பகுதியில் பொதுமக்கள் சுமார் 1156 பேர் கலந்துகொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர்.

குறித்த மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது சம்பந்தமாக இலங்கை இராணுவ மருத்துவ கல்லூரி உட்பட முப்படையினர் பாராட்டப்படது.