சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது
 

அண்மையில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்விரோதமான மீன்பிடி மற்றும் வெடிபொறுட்கள் பயன்படுத்தல் ஆகிய  காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி ஜின்னபுரம் பகுதியில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள் 03 சட்டவிரொதமான வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 573 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 03 ஆம் திகதி தலுவ பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 03 சட்விரோதமான வழைகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கடந்த நவம்பர் 05 ஆம் திகதி சவுத்பார் பகுதியில் வைத்து வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து 20 ஜேலட்நய்ட் குச்சிகள் மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், ஜேலட்நய்ட் குச்சிகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளின் கடற்படையினரால் கடந்த நவம்பர் 06 ஆம் திகதி வங்காலே கடற்கரை பகுதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான 41 பாலித்தீன் பைகள் கன்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்திற்கிடமான பைகளில் 9532 கிளிபோசேட் பெகெட்டுகள் காணப்பட்டுள்ளதுடன்  குறித்த கிளிபோசேட் பெகெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்க அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த நவம்பர் 07 ஆம் திகதி கடற்படையினருக்கு வழங்கிய தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் மன்னார் பொலிஸார் இனைந்து சவுத்பார் பகுதியில் காட்டுசெடிக்குள் ஒளித்து வைக்கப்பட்ட  20 ஜெலட்நடை குச்சிகள் கன்டுபிடிக்கப்படுள்ளதுடன் குறித்த ஜெலட்நடை குச்சிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த நவம்பர் 10 ஆம் திகதி அரிப்பு பகுதிக்கு மேற்கு திசை கடலில் வைத்து சட்விரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு, ஒரு சட்டவிரொதமான வலை மற்றும் பிடிக்கப்பட்ட 08 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மீனகள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.