இரனை தீவி செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு
 

வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பௌத்த சம்மேளன நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1,117,543.15 ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மானவேளைகளை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இக்கிறிஸ்துவ தேவாலய திறப்புவிழா விலாநிகழ்வு, யாழ் மறைமாவட்ட ஆயர், வைத்தியர் ஜஸ்டின் பீ ஞானபிரகாசம் அவர்களின் தலைமையில் 06 ஆயர்கள் 06 நன் சகோதரிகள் உட்பட 400 பேரின் பங்கேப்பில் நிகழ்ந்தது.

இப்புனரமைப்பு வேளைத்திட்டங்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களின் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் முதித கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் கட்டளை பொறியியல் அதிகாரி லெப்டினென்ட் கமாண்டர் என் அழகப்பெரும மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கடற்படையின் இச்சேவையினை பொதுமக்கள் பாராட்டினார்.

இந்நிகழ்வில் கழந்துகொன்ட சமய பிரமுகர்கள் மற்றும் சுமார் 400 க்கான பக்தர்களுக்கு மதிய உணவை வழங்குதல் இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் எம்.எச் ஜயதேவ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சமய பிரமுகர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 1992 ஆன்டின் பின் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற மிக பிரான்டமான விழா என்று அவர்களால் புகழ்பெற்றது.