இலங்கை படகுகள் கண்காட்சி 2018 க்காக கடற்படையின் பங்களிப்பு
 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் படகுகள் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் இனைந்து ஏற்பாடுசெய்யப்பட்ட படகுகள் கண்காட்சி இம்முரை காலி துறைமுக வளாகத்தில் கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி தொடங்கியதுடன் இது மூன்று நாட்களாக நடைபெற்றது.

இந்த கண்காட்சிக்காக கடற்படையின் சிறிய படகுகள் நிலத்திலும், தண்ணீரிலும் காட்டப்பட்டுள்ளது. கடற்படையின் கண்ணியம் மற்றும் புகழ் காண்பிக்கும் அழகான அறையொன்றும் இக் கன்காச்சியில் கொன்டுள்ளது. இந்த கண்காட்சியின் தொடக்க விழாவிற்கு தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்குபெற்றார்.