கிரிந்தை கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு
 

தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட  கரையோர ரோந்து படகொன்று மூலம் நேற்று (செப்டம்பர் 16) கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல்கள் தொலைவில் பாதிக்கப்பட்ட 04 மீனவர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரபட்டது.

கமிலா II எனப் பெயரளிக்கப்பட்ட குறித்த மீன் பிடி படகு கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக புறப்பட்டு சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. சிறிய இராவணன் (Little bases) கலங்கரை விளக்கின் அருகே பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து பற்றி கிரிந்தை மீன்வளத்துறை பரிசோதனை அலுவலகம் மூலம் தெரிவித்த பின் உடனடியாக ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்த தென் கடற்படை கட்டளையின் கறையோர படகு மூலம் குறித்த மீனவர்களை காப்பாற்ற முடிந்தது.
மேலும் காப்பாற்றபட்ட மீனவர்களை பாதுகாப்பாக கிரிந்தை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.