கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி பாடநெறி திருகோணமலையில்
 

கூட்டு கடல்சார் திறன்கள் பயிற்சி (Integrated Maritime Skills Training) பாடநெறி நேற்று (செப்டம்பர் 03) திருகோணமலை சிறப்பு படகு படையனி தலைமையகத்தில் தொடங்கியது. தொடங்கும் விழாவிற்கு 4வது துரித தாக்குதல் படகு படையனி தலைமையகத்தில் கட்டளை அதிகாரி கேப்டன் அருன வீரசிங்க மற்றும் அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தில் பணிக்குழு, கூட்டுறவு செயற்குழுவின் (மேற்கு) உறுப்பினர்கள் கழந்துகொன்டனர்.

குறித்த பாடநெரி 02 வாரங்கள் திருகோணமலை சிறப்பு படகு படையனி தலைமையகம் பகுதியில் இடம்பெறவுள்ளது. அங்கு கேள்வி கேற்கும் முறைகள், சக்தி பயன்பாடு, மருந்து பரிசோதனை, செயல்பாட்டுத் திட்டங்கள் மற்றும் தேடல் நுட்பங்கள் பற்றி அறிவு வழங்கப்படுகிறது. குறித்த பாடநெரிக்காக இலங்கை கடற்படை துரித தாக்குதல் படகு படையனியின் 16 கடற்படையினர்கள், சிறப்பு படகு படையின் 16 கடற்படையினர்கள் உட்பட கூட்டுறவு செயற்குழுவின் (மேற்கு) மற்றும் அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தில் பணிக்குழுவின் 07 பேர் கழந்துகொள்ளவுள்ளனர். மேலும் இரு நாடுகளில் பயிற்சி மற்றும் ஆதரவு தேவைகளுக்கு பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தல் இன் படநெரியின் முக்கியமான நோக்கமாகும். மேலும் இந்த பயிற்சி பாடநெரி மூலம் இலங்கை கடற்படையின் மற்றும் அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தில் பணிக்குழு, கூட்டுறவு செயற்குழுவின் (மேற்கு) உறுப்பினரின் தொழில்முறை திறன்களை வளர்க்க மற்றும் கடல் குற்றங்கள் தொடர்பாக தங்கள் அறிவை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. இப் பாடநெரி 2018 செப்டம்பர் 14 ஆம் திகதி நிரைவடையும்.