இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 02 படகுகள் நேற்று (ஜூலை 23) கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது. வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு மற்றும் கடலோர பாதுகாப்பு படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களினால் காங்கேசன்துறை கலங்கரை விளக்கத்துக்கு வடமேற்கு பகுதி கடல் பகுதியில் 10.5 கடல் மைல்கள் தூரத்தில் வைத்து இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பானம் கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.