சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
 

கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட காரனத்தினால் மற்றும் சட்டவரோதமான வெடி பொறுட்கள் வைத்திருந்த காரனத்தினால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.

அதன் பிரகாரமாக வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த 19 ஆம் திகதி தலுவ கடற்கரை பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து பணிகளின் போது சட்விரோதமான வலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டது. அங்கு சட்டவிரோதமான ஒரு வலை கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மற்றும் வலை ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த 19 ஆம் திகதி வெடிதலதீவு கடற்கரையில் சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 33 கடல் அட்டைகள் மற்றும் வல்லமொன்று கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், கடல் அட்டை பொதி மற்றும் வல்லம் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெடிதலதீவு மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே தினம் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் பல்லமுனை பகுதியில்  அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று பேர் (03) கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து சட்டவிரோதமான ஒரு வலையுடன் டிங்கி படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபர்கள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார்  மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 19 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மட்டக்களப்பு பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமான வலயொன்று கன்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த 20 ஆம் திகதி கிழக்கு கடல்கரை அருகில் நிலாவேலி பகுதியில் கட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு 02 டிங்கி படகு, சட்டவிரோதமான 03 வலைகள், பிடிக்கப்பட்ட 23 கிலோகிராம் மீன்கள், மீன் பிடிப்பதற்காக  பயன்படுத்தப்படுகின்ற 10 ஜலக்நய்ட் குச்சிகள் மின்சார இல்லாத 04 துருப்புக்கள் மற்றும் 04 பாதுகாப்பு ஃபியூஸ்கள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துடன் டிங்கி படகுகள், மீன்கள், வெடி பொருட்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் திருகோணமலை மீன் வள இயக்குனருடன் இனைந்து கடந்த 20 ஆம் திகதி நிலாவேலி மற்றும் அடுக்குபாடு பகுதிகளில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான 02 வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 21 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் நெடுன் தீவு மக்களுடன் இனைந்து நெடுன் தீவு முழுவதும் கடற்கரையை சுத்தம் செய்யும் போது சந்தேகத்திற்குரிய பொதி ஒன்று காணப்பட்டது. அதை சொதிக்கும் போது 28.37 கிலோகிராம் கேரல கன்சா என கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் குறித்த போதை பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுன் தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.