நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
 

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (பெப்ரவரி 28) உதவியளித்துள்ளனர். பல நாள் மீன்பிடிக்காக காலி  மீன்பிடித்துறைமுகத்திலிருந்து சென்றிருந்த வினோத் கிரிஷான் 06 எனும் மீன்பிடிப்படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு பயணத்தின் போது இதயக்கோளாறு ஏற்பட்டு அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டுள்ளன.

குறித்த நபர் தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இம்மீன்பிடி படகு 54 கடல் மைல்கள் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் ரனரிசி அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.