கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்ச்சிப் பெற்ற 139 கடற்படையினர்கள் வெளியேறினர்.
 

லங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் பயிற்சிப்பெற்ற 16 அதிகாரிகள் மற்றும் 123 கடற்படை வீரர்கள்  தமது பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து இன்று (பிப்ரவரி 27) திருகோணமலை சாம்பூரில் உள்ள மரைன் படைப்பிரிவு தலைமையகத்தில் வெளியேறினர்கள்.

குறித்த மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மிக வண்ணமயமாக வெளியேறல் அணிவகுப்பு நடைபெற்றதாக குறிப்பிடத்தக்து.

இந்நிகழ்வில், கடற்படையின் பனிப்பாலர் நாயகம் தனிப்பட்ட ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா, பணிப்பாளர் கடற்படை தரை நடவடிக்கைகள் கொமடோர் உதேனி சேரசிங்க, இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தின் தளபதி கேப்டன்  சுமித்ர பொன்சேகா ஆகியவர்கள்  உள்ளிட்ட கிழக்கு கடற்படை கட்டளையின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.