ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
 

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள்  இன்றுடன் (பிப்ருவரி 26) தமது 34 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் மற்றும் கடற்படை பணிப்பாளர் நாயகங்கள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழத்துக்கள் தெரிவித்தார்கள்.

அதன் பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும்  சிரேஷ்ட  அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாய் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.1984  ம் ஆண்டில் 12 வது ஆட்சேர்ப்பின் அதிகாரியாக கடற்படையில் இனைந்த இவர் தன்னுடைய சேவை காலத்தின் பல்வேறு தூரைகளின் கடற்படை நலனுக்காக பணியாற்றினார்.