கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் ஒருவர் கைது
 

வழங்கிய தகவலின் படி நேற்று (ஜனவாரி 25) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள்  மற்றும் நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களம் உத்தியோகத்தர்கள் இனைந்து பிடிபன பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 22 கிலோ கிராம் கடலாமை இறைச்சி மற்றும் 5.4 கிலோ கிராம் முட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடலாமை இறைச்சி மற்றும் முட்டைகள் சட்டவிரோதமான முரையில் மோட்டார் சைக்கல் முலம் விற்பனைக்கு தயாராக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர், கடலாமை இறைச்சி, கடலாமை  முட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கல் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.