இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர பெருமையுடன் தனது 17 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
 

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை போர்க்கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நன்திமித்ர கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பெருமையுடன் தனது17 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் அசங்க ரனசூரிய, கப்பலின் நிர்வாக அதிகாரி கொமான்டர் சமிந்த பிரநான்து மற்றும் நன்திமித்ர கப்பலின் கேப்டன் நிஷாந்த பீரிஸ், கப்பலின் நிர்வாக அதிகாரி சந்தன சமரகோன் ஆகிய சிரேஷ்ட அதிகாரிகளின் தலைமையில் கப்பல் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் இடம்பெற்றது.

அதன் பிரகாசமாக கப்பலில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்காக சிநேயபூர்வமான சந்திப்பு, ஏ 543 கப்பலில் திமிங்கலம் பார்வையிடும் சுற்றுப்பயணம், கடல் சுற்றுப்பயணம் மற்றும் விளையாட்டு அம்சங்கள் கப்பல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது.