சட்டவிரோதமாக மின்னல் கடத்தி தகடுகள் விற்க தயாரான ஒருவர் கைது செய்ய கடற்படையின் உதவி
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (டிசம்பர் 11) மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கடவத்த பொலிஸ் குற்றப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பண்டைக்கால மதிப்புள்ள ஒரு மின்னல் கடத்தி தகடு மற்றும் சுமார் 60 அடி நீளமான செப்பு படியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மின்னல் கடத்தி தகடுகள் விற்பனைக்காக மோட்டார் வன்டி மூலம் எடுத்து செல்லும் போது கடவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேகநபர், மோட்டார் வன்டி மற்றம் கைப்பற்றப்பட்ட மின்னல் கடத்தி தகடு மேலதிக விசாரணைக்காக கடவத்த பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.