கடற்படையின் 67வது ஆண்டு நிறைவுக்கு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு இனையாக வட மத்திய கடற்படை கட்டளையின் பல சமூக சேவைகள்
கடற்படையின் 67வது ஆண்டு நிறைவுக்கு மற்றும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு இனையாக வட மத்திய கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் பல சமூக சேவைகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
அதன் பிரகாசமாக இசின்பெஸ்ஸகல பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட 02 குடும்பங்களின் கல்வி கற்கும் 05 குழந்தைகளுக்காக பாடசாலை சீருடைகள், காலணி மற்றும் 2018 ஆண்டிற்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இச் சந்தர்ப்பத்தில் ஒரு குடும்பத்தில் வசிக்கும் ஊனமுற்ற குழந்தைக்கு ஒரு சக்கர கதிரை வழங்கப்பட்டது. இந்த தொண்டு நிகழ்வுக்காக பூனேவ கடற்படை வளாகத்தில் அதிகாரிகள் மற்றும் வீரர்களால் நிதி பங்களிப்பு வழங்கப்படுகிறது.











