சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 மீனவர்கள் கைது
 

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்களில் (Inshore Patrol Craft) இனக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (டிசம்பர் 06) சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 மீனவர்கள் குதிரமலை கிழக்கு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டன.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 02 படகுகள், 05 சட்டவிரோத வலைகள் மற்றும் பிடிக்கப்பட்ட 283 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகுகள், பிடிக்கப்பட்டுள்ள மீன் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் துனை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.