பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞே கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் கடற்படை கப்பல் ஓவேஞே இன்று (டிசம்பர் 03) கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. இன் நிகழ்வுக்காக பிரான்ஸ் தூதுவர் ஜின் மரீன் ஷுஹ் அவர்கள் உட்பட தூதரகத்தின் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.

142 மீட்டர் நீளம் மற்றும் 20 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 600 தொன்கள் எடையினை சுமந்து செல்லக்கூடியதும் 145 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் புதன்கிழமை (நவம்பர்,06) நாட்டை விட்டு புறப்படவுள்ள இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.