கடற்படைக்குழுக்கள் நிவாரணப்பணிகளில் இணைவு
 

நாட்டில் நிலவிய கடும் காற்றுடன் கூடிய காலநிலையை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை கடற்படையினரால் 12 இலகுரக படகுகளுடன் கூடிய 13 நிவாரணக் குழுக்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தென், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடற்படையின் நிவாரண குழுக்கள் செயற்படுத்தப்பட்டன. தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஆறு நிவாரண குழுக்கள் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்ட அதேவேளை மீதமுள்ள குழுக்கள் சபரகமுவ மாகாணத்தில் மனிதாபிமான உதவி வழங்கியது.

இந்த நடவடிக்கைகளின் போது, கடற்படை வீரர்களினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 155 க்கும் மேற்பட்டோர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள கடுமையான காலநிலை நிலைமைகளின் போதும் இந்த கடற்படை குழுக்ககளின் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்கின்றன.