புதிய கடற்படை தளபதி இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

புதிதாக நியமிக்கப்பட்ட கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஒக்டோபர், 31) இடம்பெற்றது. 22ஆவது கடற்படையின் புதிய தளபதி தனது கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களை இதன்போது பரிமாறிக்கொண்டார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டடன.