இந்தோனேசிய கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இந்தோனேசிய கடற்படை கப்பல் “பிமா சுசி ” நேற்று (ஒக்டோபர், 30) இலங்கை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளது.

மேலும், இக்கப்பலின் சிப்பந்திகள் இங்கு தரித்திருக்கவுள்ள நாட்களில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பின்னர் எதிர்வரும் 2ஆம் திகதி நவம்பர் மாதம் புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.