சீஜி 60 கடலோர பாதுகாப்புப் படை கப்பல் சுரக்ஸா எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு
 

இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் முதலாவது ஆழ்கடல் ரோந்து கப்பலுக்கு சுரக்ஸா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் ஆணையதிக்காரம் அளித்து வைக்கும் நிகழ்வு கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றது.

இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு கபில வைத்தியரதன அவர்கள் வருகை தந்திருந்தார். இந் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை இலங்கை கடற்படை தளபதி மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு படை பணிப்பாளர் இணைந்து வரவேற்றனர்.

இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான 74.10 மீட்டர் நீளமுடைய இவ் ஆழ்கடல் ரோந்து படகு இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு செப்டம்பர் மாதம் வைபவரீதியாக பரிசளிக்கப்பட்டது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஆணைச்சீட்டு கப்பலின் கட்டளைத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் இவ் ஆணைச்சீட்டு கப்பலின் கட்டளை தளபதியினால் வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரமளிக்கப்பட்ட பெயர் பலகையினை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார். பின்னர் குறித்த பெயர் பலகைக்கு மத தலைவர்களினால் ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கையின் கடலோர பாதுகாப்பு படை கப்பல் சுரக்ஸாவினுள் 14 அதிகாரிகள் மற்றும் 86 சிப்பாய்கள் பயணிக்க முடியும். குறித்த இக்கப்பல் 1,160 தொன் எடைகளுடன் மணித்தியாலத்திற்கு 22 கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்ககூடிய ஆற்றல் பெற்றது. மேலும், 8,500 கடல் மைல்கள் பயண எல்லையை கொண்டுள்ள இக்கப்பல் சாதாரண சஞ்சரிப்பு நேரத்தில் மணித்தியாலத்திற்கு 16 கடல்மைல்கள் வேகத்தில் பயணிக்ககூடியது.

இந்நிகழ்வில், மகா சங்க உறுப்பினர்கள், ஏனைய மத தலைவர்கள், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானியாகர் அதிமேதகு ஸ்ரீ தரஞ்சித் சிங் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக் கப்பல் மூலம் இலங்கையின் கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகள், தேடுதல், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரண செயற்பாடுகள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். அத்துடன் இக்கப்பல் பயிற்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.