மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் (NOLES – 2017) வெலிசரை கடற்படை வளாகத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது
 

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்க பசிபிக் கட்டளை மரையின் படைவுடன் இனைந்து கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி தொடங்கிய மரணம் அல்லாத ஆயுதங்கள் பற்றிய புல பயிற்சி தொடர் இன்று வெற்றிகரமாக வெலிசரை கடற்படை வளாகத்தில் நிறைவடைந்தது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக, கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் கழந்துகொன்டார்.

09 நாட்கள் முலுவதாக நடைபெற்ற குறித்த புலம் பயிற்சி தொடர் கருத்தியல் அறிவு, விரிவுரைகள் மற்றும் நடைமுறை அறிவு உட்பட பல பயிற்சி திட்டங்கள் கொன்டுள்ளது. இத் திட்டத்தின் முதல் கட்டம் விரிவுரைகளுக்கும் இறுதி கட்டம் நடைமுறை பயிற்சிக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்படுத்தும் போது தேவையான தொடர்ந்த மக்கள் பலத்தை பராமரித்தல், தொடர்பாடல் திறன்கள், கண்காணித்தல், தழுவல், முடிவெடுக்கும் மற்றும் செயல்படுத்தல், (OODA) நடவடிக்கைகள், வாகன கண்காணிப்பு மையங்கள் பராமரிப்பு, தேடுதல் சோதனைகளுடன் கலவர கட்டுப்படுத்த மரணம் அல்லாத தாசர் (TASER) மற்றும் மிளகு தெளித்தல் (Pepper Spray) மூலம் கலகம் கலவரங்களின் ஈடுபடுவர்களை மிகவும் வெற்றிகரமான கட்டுப்படுத்துவது எப்படி என்ற பயிற்சிகள் இங்கு நடைபெற்றது. இந்த நடைமுறை பயிற்சிகளுக்காக இலங்கை கடற்படையின் அதிகாரிகள் உட்பட 140 வீரர்கள் கழந்துகொன்டனர். ஐக்கிய அமெரிக்க மரையின் படையின் ஒரு அதிகாரி உட்பட 16 வீர்ர்களால் குறித்த விரிவுரை மற்றும் நடைமுறை பயிற்சிகள் நடத்தப்பட்டன.

பாதுகாப்பு சட்டங்கள் மீறிய ஒருவர் தடுப்பு நடவடிக்கைகளின் போது ஜெனீவா உடன்படிக்கையின் படி என்த தவறுக்கும் இடமலிக்காமல் மற்றும் எந்தவொரு கட்சிக்கும் எந்தவொரு பாரபட்சத்திற்கும் இடமலிக்காமல் திட்டமிட்ட முறையில் செயல்படுவது எப்படி என்பது கூறுவதும் இன் நடைமுறை திட்டத்தின் ஒரு நோக்கமானது.

குறித்த புலம் பயிற்சிகளுக்கு இணையாக இலங்கை கடற்படை மூலம் அமெரிக்க கடற்படையினர்களுக்கு பல திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இலங்கை கடற்படையின் அங்கம்பொரா படை வழங்கிய பாரம்பரிய போர் நிகழ்ச்சி ", கண்டி தலதா மாளிகை மற்றும் பின்னவல யானை அனாதை இல்லத்தை பார்வையிடல் ஆகிய திட்டங்கள் இதுக்காக உள்ளடங்கியது.

இறுதி நிகழ்விற்காக கடற்படை பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் திமுது குனவர்தன, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல ஆகியோர் உட்பட பல மூத்த கடற்படை அதிகாரிகளும், இலங்கையின் அமெரிக்க துணை பாதுகாப்பு ஆலோசகர், திரு. ஜேக்கப் இங்லிஸ் அவர்கள் மற்றும் பல அதிதிகள் கழந்துகொன்டனர்.

குறித்த மரணம் அல்லாத ஆயுதங்கள் பயன்படுத்தல் பற்றிய புலம் பயிற்சிகளுக்கு இணையாக நடைபெறும் நிர்வாக கருத்தரங்கு இன்று (ஆகஸ்ட் 30) கொழும்பு கலதாரி ஹோட்டலில் தொடங்கியது. இதுக்காக 18 நாடுகள் குறித்து 41 வீரர்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை குறித்து 06 பேரும் இலங்கையின் முப்படை மற்றும் காவல்துரையில் மூத்த அதிகாரிகளும் கழந்துகொள்வார்கள்.