கடற்படை பாய்மர படகு அணிக்கி பல வெற்றிகள்
 

கொழும்பு ராயல் பாய்மர படகு சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘RCYC Commodore’s Race Sailing Championship – 2017’ பாய்மர படகு போட்டித்தொடர் அகஸ்ட் மாதம் 26ம் திகதி பொல்கொட நீர்த்தேக்கத்தில் நடைபெற்றது. கடற்படை பாய்மர படகு அணி குறித்த தொடரில் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டித்தொடருக்கு 27 பாய்மர படகுகளுடன் 35 விளையாட்டு வீரர்கள் கலந்து கொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. அங்கு லேசர் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும் எண்டர்பிரைசஸ் பிரிவின் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களும் கடற்படை பாய்மர படகு அணி வெற்றி பெற்றுள்ளது.