கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 29) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

அங்கு பாதுகாப்பு செயலாளர் முதலில் இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், முதலாம் உத்தியோகபூர்வமான இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.