புதிய கடற்படைத் தளபதி கெளரவ பிரதமருடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அலரி மாலிகயில் வைத்து சந்திதித்துள்ளார். இச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சின்னையா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கெளரவ பிரதமருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்புவாகும்

அங்கு கெளரவ பிரதமர் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். இங்கு இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.