புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்புී
 

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல்  ட்ரவிஸ் சின்னையா அவர்கள் இன்று (ஆகஸ்ட் 22)  ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இவர் கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்ற பின் முதலில் அதிமேதகு ஜனாதிபதியவர்களை சந்திக்க நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளார்.

அங்கு அதிமேதகு ஜனாதிபதியவர்கள் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்திற்காக இலங்கை கடற்படை மூலம் வழங்கப்படுகின்ற பங்களிப்பை பாராட்டினார். அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களால் ஜனாதிபதியவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன.