சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (ஆகஸ்ட் 21)  சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்களை கல்பிட்டி, ஒடக்கரதிவு, சின்ன எருமதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய 03 படகுகள், 05 சட்டவிரோத வலைகள் மற்றும் பிடிக்கப்ட்ட 07 கிலோ கிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.