இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்
 

ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ரியர் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்களை வைஸ் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டு இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் இன்று (ஆகஸ்ட் 22) காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களால் புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு பாரம்பரியமாக கடற்படைத் தளபதியின் வாள் மற்றும் கடமைகளை சமர்ப்பிக்கப்பட்டது. இதுக்கு இணையாக புதிய கடற்படைத் தளபதி அவர்களுக்கு சிறப்பு கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். குறித்த நிகழ்வுக்காக இவரின் மனைவி திருமதி திருனி உட்பட கடற்படை கட்டளைகளின் தளபதிகள், கடற்படை இயக்குனர் ஜெனரல்கள், ஜெனரல் சர் ஜான் கொட்டாலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணை அதிபர், கொடி அதிகாரி வெளியீடு கட்டளை, திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் கழந்து கொன்டனர்.

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரமி லியந்துரு சின்னையா அவர்கள் கண்டி திரித்துவக் கல்லூரியின் மற்றும் திருகோணமலை புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவராவார். 1982 ஆண்டில் நவம்பர் மாதம் 15ம் திகதி கடற்படையில் கெடட் அதிகாரியாக இணைந்து திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் 1984ம் ஆண்டு பயிற்சியை முடித்த பின் ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய ராயல் கடற்படை கல்லூரியில் பயிற்சியை முடித்து 1986ல் பட்டம் பெற்றார்.

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமிக்கபட முன் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார். கண்டியை பிறப்பிடமாக கொண்ட இவரின் மனைவி திருமதி திருனி சின்னையா ஆவார், மகன் தாருன் (24) மற்றும் மகள் எனக்சி (21) ஆவார்கள்.