ஜப்பானிய கடற்படை கப்பல் அமகிரி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை
 

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

மூன்று தின நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள இக் கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் கூட்டு கடற்படை பயிச்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் இலங்கையில் தரித்திருக்கவுள்ள இக்கப்பல் சிப்பந்திகள் இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான "சமுதுர"வுடன் இணைந்து கூட்டுப்பயிற்சிகள் சிலவற்றில் பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜப்பான் 2 வது பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி கேப்டன் கோஜி சய்டோ மற்றும் இக் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் மிசியகி மொரி ஆகியோர் தென் கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அடமிரல் நிஷாநத உலுகேதென்ன அவர்களை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திக்கவுள்ளனர்.