‘அபி வெனுவென் அபி’ வீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு வீர்ரின் குடும்பத்திற்கு புதிய வீடு
 

‘அபி வெனுவென் அபி’ ரணவிரு வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மற்றொரு வீடு கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களால் இன்று (ஆகஸ்ட் 20) பிரதான சிரிய அதிகாரி டீகெஜிஎஸ் விஜேசிரி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மாத்தளை, நாவுல பகுதியில் அனைத்து வசதிகளும் கொன்ட குறித்த வீடு கடற்படைப் சிவில் பொறியியல் பிரிவின் அதிகாரிகள் மற்றும் விரர்களால் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இன் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சநத் உத்பல, இயக்குனர் கடற்படை நலன் கொமடோர் நிலந்த ஹீனடிகல ஆகியோர் கழந்துக் கொன்டனர். இன் நிகழ்வு நினைவுகூறும் வகையில் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க அவர்களால் இந் இடத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.