ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

தென் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகரவுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (ஆகஸ்ட் 20) மீன்பிடி படகொன்றில் ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சைக்காக கரைசேர்க்க உதவியலித்தனர்.

கடந்த ஜுலை 14ம் திகதி குறித்த சச்மித புதா எனும் படகு பேருவல மீன்பிடி துறைமுகம் விட்டு புறப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் பற்றிய விடயங்கள் பேருவல பொலிஸார் மூலம் கடற்படையினருக்கு வழங்கிய பிரகு தென் கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர கடலுக்கு புறப்பட்டது.

அதின் பிரகாசமாக காலி கலங்கரை விளக்கத்தில் சுமார் 54 கடல் மைல்கள் தூரத்தில் இருந்து நோயாளியை காலி துறைமுகத்திக்கு கொண்டுவந்து முதலுதவி அளிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக காலி காலிபிட்டிய பொது வைத்தியசாலை (கற்பித்தல்)அனுமதிக்கப்பட்டார்.