சீன கடற்டை மருந்துவக் கப்பல் ஹெபிங்பாங்சவோ (Ark Peace) தாயாகம் திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த ஆகஸ்ட் 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்த பின் இன்று (ஆகஸ்ட் 09) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பலை அனுப்பிவைத்தனர்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்துள்ள 'சமாதான பேழை’ (Ark Peace) எனும் கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து இக்கப்பலின் சிப்பந்திகள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர். மேலும் நேற்று (ஆகஸ்ட் 08) குறித்த மருந்துவக் கப்பலில் இலங்கை கடற்படையின் மருத்துவர்களுடன் மற்றும் மருத்துவ பிரிவின் வீர்ர்களுடன் இனைந்து சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான நிவாரண பற்றிய கூட்டு பயிற்சிகள் மேற்கொன்டுள்ளனர். குறித்த நிகழ்வுகளுக்காக அரசு மருத்துவர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படையினர்கள் உட்பட பல மருத்துவ மாணவர்கள் கழந்துகொன்டனர்.