பாதிக்கப்பட்ட படகில் இருந்த 06 மீனவர்களை கரைசேர்க்க கடற்படையின் உதவி
 

இலங்கையின் தெற்கு பகுதி கடலில் பாதிக்கப்பட்டு மிதந்துகொன்டுருந்த ‘தினு புதா 1’ எனும் படகில் இருந்த 06 மீனவர்கள் கரைசேர்க்க கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளது.

கடந்த ஜுலை 21ஆம் திகதி குறித்த படகு அம்பாந்தோட்டை துறைமுகம் விட்டு புறப்பட்டதாகவும் சுமார் 240 கடல் மைல்கள் தூரத்தில் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள செயல்நீக்கத்தினால் கடலில் மிதக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.

இக் காரனங்கள் கடற்படைக்கு அறிவித்த பின் கடற்படையினர் குறித்தநபர்கள் மீட்டும் பணிகளுக்காக இலங்கை கடற்படை கப்பல் ‘சாகர’ அப் பகுதிக்கு அனுப்பிவைத்தனர். கடலில் உள்ள கடினமான சூனலை மத்தியில் 06 மீனவர்களும் சாகர கப்பல் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்திக்கு கொண்டுவந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு தேவையான முதலுதவி உட்பட உணவு மற்றும் பிற தேவைகளை கப்பலின் கடற்படையினர்கள் நிறைவேற்றியதாக குறிப்பிடத்தக்கது.