இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்துருக்கும் இந்திய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட் 03) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

இச் சந்திப்புக்காக பாதுகாப்பு பொருட்களுக்கான இந்திய பாதுகாப்பு செயலாளர் அசோக் குமார் குப்தா, இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரியர் அட்மிரல் (ஓய்வு) சேகர் மிட்டல் ஆகியொர் கழந்து கொன்டனர். மேலும் இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.